நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Friday 25 June, 2010

பிறருக்கு கொடுத்து உதவுங்கள்!



'மிகுந்த புண்ணியங்களை விலையாக கொடுத்து, இந்த, மனித சரீரமாகிய ஓடம் வாங்கப்பட்டுள்ளது, இது உடைந்து போவதற்குள் பிறவிக் கடலை தாண்டி, அக்கரை போய்ச் சேர்' என்று ஒரு மகான் கூறுகிறார். மனிதப்பிறவி கிடைத்தும், ஞானம் பெறாதவர்கள், பசுவாகவோ, இதர பிராணிகளாகவோ இருந்திருக்கலாமே!

ஏனெனில், மனிதர்களுக்குத் தான் சாஸ்திரம், சம்பிரதாயம், பாவம், புண்ணியம், செய்ய தகுந்தவை, செய்ய தகாதவை, என்றெல்லாம் உள்ளது; பிராணிகளுக்கு இதெல்லாம் கிடையாது; அதனால், சாஸ்திர சம்பிரதங்களை அனுசரித்து நடவாத மனிதன் மிருகமாகவே இருந்திருக்கலாமே! என்றார் அவர். பணம், பொருள் மேல் தீராத ஆசை மனிதனுக்கு. நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சேர்த்து வைக்க வேண்டும்! இதற்காக ஓய்வில்லாமல் ஓடித் திரிவதும், கவலைப்படுது மாகவே காலம் கழிகிறது; சம்பாதித்து போதும்,. சேர்த்து வைத்தது போதும் என்றுஎத்தனை பேர் சொல்லி இருக்கிறார்கள்?

பணம் சேரச் சேர ஆனந்தம், ஒன்றுக்கு பக்கத்தில் எத்தனை பூஜ்யம் இருந்தாலும், 'இன்னும் ஒரு பூஜ்யம் சேர வேண்டும்' என்று ஆசை. கடைசியில் இவன் கொண்டு போவது ஒரே ஒரு பெரிய பூஜ்யம்' தான். அனால், அதை பற்றி இப்போது கவலைபடுவதில்லை! இவன் நிறைய சேர்க்கச் சேர்க்க, இவனது வயது ஏற ஏற, மற்ற பந்து மித்தரர்கள் இவனையே கவனிக்க ஆரம்பித்து விடுக்கின்றனர்.

பொருள், பணம் சேர்க்க வேண்டியது தான்: இருக்கும் போதே தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால், அவர்களும் பயன்பெற்று சந்தோசமடைவார்கள்; தனக்கும் திருப்தியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.நாம் போன பிறகு இவ்வளவும் யார் எடுத்து கொள்வாரோ!என்ற மனகவலையுடன், சாந்தியில்லாமல் போகவேண்டாமே!

நிறைய சம்பாதித்தான், எல்லாருக்கும் கொடுத்தான், புண்ணியவான்! அவனுக்கு நல்ல கதி கிடைக்கட்டும்...' என்று உற்றாரும், சுற்றாரும் சொல்லவேண்டாமா?. பணம் படைத்தவன் ஏழ்மை நிலையில் உள்ள சுற்றத்தார்க்கு உதவி செய்யாவிடில், அது பெரிய பாவம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
சாஸ்திரம் பெரிதா, தர்மம் பெரிதா? சிந்திக்க வேண்டும். இப்போது கொடுப்பது பல மடங்காக பிறஜென்மங்களில் வரும், வந்தே தீரும். கொடுக்க மனம் வர வேண்டும், கை வர வேண்டும். இரண்டும் இருந்தால், போதும்!

2 comments:

Asiya Omar said...

ஜெகதீஸ் நல்லதொரு இடுகை.உங்க வயதிற்கு ஆன்மீகம் பற்றிய உங்கள் ப்ளாக் ஆச்சரியம் தருகிறது.

jagadeesh said...

வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி, அக்கா.

Post a Comment