நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Tuesday 15 February 2011

பெண்கள் - பணிகளில் அடங்கிய பயிற்சிகள்


துணி துவைத்துப் பிழிதல்  -  கை அழுத்தப் பயிற்சி
பெருக்குதல், வீடு துடைத்தல்   - இடுப்புப் பயிற்சி
பாத்திரம் கழுவுதல்  - கைப் பயிற்சி
சப்பாத்தி இடுதல்   - முழங்கை அசைவுப் பயிற்சி
மாவு பிசைதல்  - விரல்களுக்கான பயிற்சி
தேங்காய் துருவுதல்  - தோல் பயிற்சி
வீடு ஒட்டடை அடித்தல் - கழுத்துப் பயிற்சி
தோசை சுட்டு உபசரித்தல் - ஓட்டப் பயிற்சி
பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல்  - கணம் தூக்கும் பயிற்சி
வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் - நடைப் பயிற்சி
குழந்தைகளை குளிப்பாட்டுதல் - அடிவயிற்றுப் பயிற்சி
மொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதல் - மூட்டுப் பயிற்சி
பால்கணக்கு, மளிகை கணக்கு போடுதல் - மூளைக்கு பயிற்சி
பாடம் சொல்லித் தருதல் - நினைவுப் பயிற்சி
கணவரிடம் திட்டு வாங்கும் பொழுது ( இதுவும் வேலைகளில் ஒன்று தான்) - இதயம் வலுப்பெறுகிறது
வளர்த்த பிள்ளைகள் வசைபாடும் பொழுது - மனம் பக்குவமடைகிறது
உற்றார் உறவினர் குறை சொல்லும் பொழுது - கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற ஞானம் கிடைக்கிறது

6 comments:

asiya omar said...

ஆஹா,சூப்பர் போஸ்ட்,காலம் கடந்து போச்சு.இப்ப இதில் பாதி பயிற்சி கூட செய்றதில்லை.பகிர்வுக்கு நன்றி.

jagadeesh said...

Thanks ka..

ம.தி.சுதா said...

நல்லதொரு பகிர்வுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

meandmythinkingcap said...

pretty sexist. So, no workout needed for men?
Why Indian men never get lucky with gals? Show this post as exhibit A :)

அண்ணாமலை..!! said...

//
வளர்த்த பிள்ளைகள் வசைபாடும் பொழுது - மனம் பக்குவமடைகிறது ;
உற்றார் உறவினர் குறை சொல்லும் பொழுது - கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற ஞானம் கிடைக்கிறது ;
//

இதுதான் மிக முக்கியமான சாராம்சம்!

asiya omar said...

இணைத்த புகைப்படம் யாரு தம்பி.உங்க உறவா?

Post a Comment